Archive for November 2013

இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
அழகிய படங்கள் உங்களுக்காக
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

காமெடி கும்மி.....Face book pics

Sunday, November 10, 2013
Posted by Rajkumar Raj
 உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

ஹலோ யார் பேசுரது.....?

Saturday, November 9, 2013
Posted by Rajkumar Raj
ஒருத்தன் கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க
சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..! எதுக்கு போன்
எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம்
ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ்
பண்ணா...ஹனிமூனு
க்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்ச
ுடு மேரேஜ் ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன
இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன
ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம்
இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த
ஆப்பர்
இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும்
இருக்கும்..!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........

என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கண்டா ..... "

"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "

"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி அதுக்கு என்ன ?"

"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "

"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி ......"

"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "

"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "

"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

"என்னடா மாப்ள ?"

"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"

"டேய் ............நீ கொயமுத்துர்ல இருக்க , நான் இங்க சிவகாசில இருக்கண்டா "

"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
Welcome to My Blog
Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -